கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 66.2 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் மண் புதையுண்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த கிழக்கரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையின் இரு வழித்தடங்களும் அனைத்து போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. குவாந்தானிலிருந்து கோலாம்பூரை நோக்கி வருகின்ற வாகனமோட்டிகள் பெந்தொங் திமுர் சாலை சந்திப்பில் நுழைந்து, பெந்தொங் பாராட் சாலையில் வெளியேறி முதன்மை நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அந்த நெடுஞ்சாலையின் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹட் அறிவித்துள்ளது.
அதேவேளையில் கோலாலம்பூரிலிருந்து குவந்தானுக்கு செல்லவிருக்கும் வாகனமோட்டிகள் சி.எஸ்.ஆர் எனப்படும் சென்ட்ரல் பைன் ரோட் சாலையை பயன்படுத்துமாறு ஆலோசனை கூறியுள்ளது. நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள அந்தப் பள்ளம் குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதால் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு வாகனமோட்டிகளை அனிஹ் பெர்ஹட் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


