Jun 6, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு உள்நாட்டிலேயே போதிய அளவில் இருப்பு: உலகளாவிய பற்றாக்குறைக்கு அச்சப்படத் தேவையில்லை
தற்போதைய செய்திகள்

எரிவாயு உள்நாட்டிலேயே போதிய அளவில் இருப்பு: உலகளாவிய பற்றாக்குறைக்கு அச்சப்படத் தேவையில்லை

Share:

மலேசியாவின் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிவாயு விநியோகம் பெரும்பாலும் உள்நாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படுவதால், தற்போதைக்கு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏதுமில்லை என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோ சாங் லி காங் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் சுமார் 80 விழுக்காடு உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைக் கொண்டே ஆதரிக்கப்படுகிறது. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் மலேசியாவிற்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், கேஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அஸ்லி முகமது கூறுகையில் , மின் உற்பத்திக்குத் தேவையான எரிவாயுவை 'பெட்ரோனாஸ்' நிறுவனத்திடமிருந்து போதிய அளவில் பெற்று வருவதால் எவ்வித விநியோகத் தடையுமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

எரிவாயு உள்நாட்டிலேயே போதிய அளவில் இருப்பு: உலகளாவிய பற்ற... | Thisaigal News