Jun 12, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை ஒருவரைத் தாக்கி வலது கண் பார்வையைப் பறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

ஆடவரை ஒருவரைத் தாக்கி வலது கண் பார்வையைப் பறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை

Share:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேர விடுதி ஒன்றில் ஆடவர் ஒருவரைத் தாக்கி, அவரது வலது கண் பார்வையை இழக்கச் செய்த முன்னாள் கிளப் காவலரான 53 ஜாம்சாரி இத்ரிஸ் என்பவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்ட நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் கோலாலம்பூர் டாங் வாங்கி பகுதியில் உள்ள கிளப் ஒன்றில், 28 வயது முஹம்மது ரம்தான் ஐடில் நோர்ஷாம் என்பவருக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதாக ஜம்ஸாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி மஜுலியானா அப்துல் ரஷித், குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு வாதங்கள் வெறும் மறுப்பாக மட்டுமே உள்ளதே தவிர, சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரது மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து, தண்டனையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டார்.

Related News