Jun 12, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் 7-இல் ஜொகூர் பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திரத் தொடக்க விழா
தற்போதைய செய்திகள்

ஜூன் 7-இல் ஜொகூர் பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திரத் தொடக்க விழா

Share:

ஜொகூர் மாநிலத்தின் 16-ஆவது தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாரிசான் நேஷனல் கூட்டணி தனது தேர்தல் இயந்திரத்தை ஜூன் 7 ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.

எஜுகிட்டி ஸ்டேடியம்யில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு, பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் ஜொகூர் மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், இடைக்கால மந்திரி பெசாருமான டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்குகின்றனர்.

மாநிலத்தில் உள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக பாரிசான் நேஷனல் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தேர்தல் இயந்திரத் தொடக்க விழா தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஒற்றுமையை நிலைநாட்டவும் ஒரு முக்கிய தளமாக அமையும் என ஜொகூர் அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் இஸ்ராக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News