Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஒரு திருநங்கையான சஞ்சனாவின் மரணம்  நீதி விசாரணை கோருக்கின்றனர் குடும்பத்தினர்
தற்போதைய செய்திகள்

ஒரு திருநங்கையான சஞ்சனாவின் மரணம் நீதி விசாரணை கோருக்கின்றனர் குடும்பத்தினர்

Share:

ஒரு திருநங்கையான சஞ்சனா என்ற சாவ்மியா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போலீசாரை அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளர்.

சஞ்சாய் காந்தி என்ற இயற்பெயர் கொண்ட 24 வயதுடைய தமது சகோதரனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றும் அது தற்கொலை அல்ல, கொலையாகும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரி பவானி தெரிவித்துள்ளார்.

சலூன் ஒன்றில் வேலை செய்து வந்த சஞ்சனா, கடந்த ஜுன் 8 ஆம் தேதி கிள்ளான, பாயூ வில்லா அபாட்மண்ட், பிலோக் பீ, 3 ஆவது மாடியில் உள்ள அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

தமது காதலன் கங்கா என்ற நபருடன் கடந்த 4 ஆண்டு காலமாக அந்த வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படும் சஞ்சனா, கடந்த ஜுன் 5 ஆம் தேதி முதல் கைப்பேசி தொடர்பில் இல்லை.

சஞ்சனாவின் நெருங்கிய தோழியின் ஆலோசனையின் பேரில், சஞ்சனாவுடன் அந்த வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த கங்கா என்ற ஆடவர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, சஞ்சனா தூக்கில் தொங்கியவாறு கண்டு பிடிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனையில் அவர் இறந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கலாம் என்பதால் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான தடயங்களை கண்டு பிடிக்க இயல வில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று பவானி தெரிவித்தார்.

தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட சஞ்சனாவின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கான ரத்தக்கட்டுகள் உடலில் ஆங்காங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சனாவின் மரணத்தில் அவரின் காதலன் கங்கா என்ற நபர் சம்பந்தப்பட்டுள்ளதாக தாங்கள் சந்தேகப்படுவதாக பவானி கூறுகிறார்.

சிலாங்கூர் சாஸ்தா உதவி இயக்கத்தின் பொறுப்பாளர் அகஸ்திய ராஜாவுடன் திசைகளுடன் பேசிய ஷா ஆலாம் பிகேஆர் டிவிஷனின் செயற்குழு உறுப்பினருமான பவானி, இது தொடர்பாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் கடந்த ஜுன் 10 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சஞ்சனா என்ற சாவ்மியா மரணம் தொடர்பாக புகார் செய்யப்பட்டும் இதுவரையில் போலீசார் தங்களிடம் எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லை என்கிறார் பவானி. அவசியம் ஏற்படுமானால் இவ்விவகாரத்தை போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல் சானி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பவானி உறுதி தெரிவித்தார்.

Related News