கூச்சிங், ஆகஸ்ட்.21-
சரவாக் மாநிலத்தின் புதிய விமான நிறுவனமான ஏர் போர்னியோ விமானச் சேவையின் சின்னம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
சரவாக் மாநில முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபேங் அதிகாரப்பூர்மாகச் சின்னத்தை வெளியிட்டார்.
கூச்சிங் சட்ரியா பெர்திவியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சரவாக் ஏர் போர்னியோ- பிராண்ட் டேக்லைனும் அறிமுகப்படுத்தப்பட்டது.
சரவாக் மாநிலத்தின் கலாச்சாரங்களை விளம்பரப்படுத்தும் அதே வேளையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் நோக்கில் சரவாக் ஏர் போர்னியோ விமானச் சேவை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஏர் போர்னியோவின் சேவை அடுத்த ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.








