பினாங்கு,ஜூலை 27-
பினாங்கு மாநிலத்தில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான Darjah Utama Pangkuan Negeri எனும் அந்தஸ்தை தாங்கிய Datuk Seri Utama விருதை தமக்கு வழங்கி, சிறப்பு செய்த பினாங்கு ஆளுநர் Tun Ahmad Fuzi Abdul Razak-கிற்கு DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இவ்விருது கிடைக்கப்பெற்றதற்காக மாநில ஆளுநருக்கு நன்றி கூற தாம் கடமைப்பட்டுள்ளதாக 83 வயது லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
பினாங்கு ஆளுநர் இன்று 142 பிரமுகர்களுக்கு பல்வேறு உயரிய விருதுகளை வாங்கி சிறப்பித்தார். விருது பெற்றவர்கள் பட்டியலில் லிம் கிட் சியாங் முதலிடத்தை பெற்றுள்ளார்.
29 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரான லிம் கிட் சியாங், 1969 ஆம் ஆண்டு தொடங்கி 2022 ஆம் ஆண்டு வரை ஐந்து மாநிலங்களில் 11 தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.








