நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முன்பு பாத்தாங் பெனார் தமிழ்ப்பள்ளியாக விளங்கிய நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளிக்கு 4.5 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக்கு 4.5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக நீலாய் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு மீண்டும் களம் இறங்கியுள்ள டிஏபியைச் சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெ. அருள் குமார் தெரிவித்துள்ளார்.
தோட்ட தமிழ்ப்பள்ளியாக விளங்கிய பாத்தாங் பெனார் தமிழ்ப்பள்ளி, 7,8 வருடங்களுக்கு முன்பு வீடமைப்புப்பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு, நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு, 2 ஏக்கர் நிலத்தில் புதிய பள்ளிக்கட்டடத்தைப் பெற்றது. இப்பள்ளிக்கு ஆரம்பத்தில் 2 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது.பள்ளிக்கு அருகில் கூடுதலாக 2.5 ஏக்கர் நிலம் இருந்தது.
நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு பக்காத்தான் ஹராப்பான், தலைமையேற்றப்பின்னர் பள்ளி கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தையும், மேற்கொண்டு கூடுதலாக இருந்த 2.5 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து, மொத்தத்தில் 4.5 ஏக்கர் நிலம் , நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிலத்தை அரசாங்க பதிவேட்டில் இடம் பெற செய்யப்பட்டு விட்டதாக நீலாய் சட்டமன்றத் தொகுதியை கடந்த இரண்டு தவணைக்காலமாக தற்காத்து வரும் அருள் குமார் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வட்டாரத்தில் அதிகமான இந்திய குடும்பங்கள் வசிக்கும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் நிலையில் இவ்விடத்தில் பள்ளி சிற்றுண்டி சாலை,பெரிய மண்டபம், ஒரு பெரிய திடல் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 4.5 ஏக்கர் நிலம் பெரும் துணை புரியும். அதன் அடிப்படையிலேயே நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் மூலம் , நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளிக்காக ஒட்டுமொத்தமாக 4.5 ஏக்கர் ஒதுக்கி தரப்பட்டுள்ளதாக அருள் குமார் தெரிவித்தார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


