Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்கு மலேசியத் தன்னார்வத் துறைக்கு (ரேலா மலேசியா) இடம் உள்ளது!
தற்போதைய செய்திகள்

எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்கு மலேசியத் தன்னார்வத் துறைக்கு (ரேலா மலேசியா) இடம் உள்ளது!

Share:

கூலிம், ஜூலை.27-

உள்துறை அமைச்சர் அமைச்சு கேடிஎன், மலேசியத் தன்னார்வலர் படையான ரேலாவின் பங்கை மிகப் பெரிய அளவில் மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளது. இனிமேல், ரேலாவில் சேவை பேரழிவுகள், விழாக்கள், போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற வழக்கமான பணிகளோடு நிற்காமல், நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

காவல்துறை, இராணுவம் போன்ற பாதுகாப்புப் படைகளுக்குத் துணையாக, எல்லைகளுக்கு முந்தைய சோதனைச் சாவடிகள், தடை செய்யப்பட்ட பகுதிகள் போன்ற இடங்களில் ரேலாவின் பணி விரிவுபடுத்தப்படும். இந்தப் புதிய பொறுப்புகளுக்கு ஏற்ப ரேலா உறுப்பினர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், அவர்களின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டத்தாரான் கூலிமில் நடைபெற்ற மலேசிய தன்னார்வத் துறையின் 53வது ஆண்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் வருகையளித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Related News