Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ் துறையைச் சாடினார் இந்திராகாந்தியின் வழக்கறிஞர்
தற்போதைய செய்திகள்

போலீஸ் துறையைச் சாடினார் இந்திராகாந்தியின் வழக்கறிஞர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்வதற்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அந்த மாதுவின் வழக்கறிஞர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்திராகாந்தியின் முன்னாள் கணவரைத் தேடி வரும் போலீசாரின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் எந்தவோர் ஆருடமும் கூற வேண்டாம் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையை இந்திராகாந்தியின் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் கடுமையாகச் சாடினார்.

16 ஆண்டுகளாக வெற்று வாக்குறுதிகளை அளித்த பிறகும், போலீஸ் துறை ஆருடங்களை மட்டுமே கூறி வரும் நிலையில், பொதுமக்கள் ஆருடங்கள் எதனையும் சொல்ல வேண்டாம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று ராஜேஸ் நாகராஜன் குறிப்பிட்டார்.

இந்திராகாந்திக்கும், பிரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் மகளுக்கும் மிகப் பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. போலீஸ் துறை தொடர்ந்து சாக்குப் போக்குகளைக் கூறி வருவதைக் காட்டியில் செயலில் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லாவைத் தேடும் நடவடிக்கையை போலீஸ் துறை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என்று ஈப்போ உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப அந்த நபரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி நேற்று அறிவித்தது தொடர்பில் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் எதிர்வினையாற்றினார்.

Related News