May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரின் அழுகிய சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

ஆடவரின் அழுகிய சடலம் மீட்பு

Share:

நேர்த்தியான உடை அணிந்திருந்த ஆடவர் ஒருவரின் அழுகிய சடலம், கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yahaya Hassan தெரிவித்தார்.நேற்று காலை 11.51 மணியளவில் ஈப்போ, Pasir Puteh- வில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் அச்சடலம் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கறுப்பு நிற Proton saga காரிலிருந்து மீட்கப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்த அடையாளம் காண இயலவில்லை. சவப்பிரசோதனைக்காக சடலம் ஈப்போ மருத்துவமனையின் சவடக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Yahaya Hassan குறிப்பிட்டார்.சம்பந்தப்பட்ட நபரின் மரணத்தில் குற்றத் தன்மை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

Related News