நேற்று மதியம் ரானாவ்வில் 6 மாணவர்களுடன் காரைக் கடத்திச் சென்ற விவகாரம் சமுக்க வலைத்தளங்களில் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டு வந்தது. அந்த விவகாரம் தொடர்பில் காரைத் திருடியதற்காக குற்றவியல் சட்டம் 379இன் படியும் மாணவர்களைக் கடத்தியதற்காக குற்றவியல் சட்டம் 365இன் படியும் காவல்துறை விசாரித்து வருகிறது என ரானாவ் மாவட்டக் காவல் துறை தலைவர் துணை கண்காணிப்பாளர் சிமியுன் லோமுடின் தெரிவித்தார்.
பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்படுவதோடு இச்சம்பவம் குறித்து பொது மக்களுக்குத் தகவல் தெரிந்தால் உடனடியாகக் காவல் துறைஐத் தொடர்பு கொள்ள சிமியுன் லோமுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.
குண்டசாங்கில் உள்ள கம்போங் பினௌசுக்கில் சாலையோர மளிகைக் கடையின் முன் காரைத் திருடிச் சென்ற ஒரு நபர் குறித்து மாலை 5.06 மணிக்கு தமது தரப்புகுத் தகவல் கிடைத்ததாகவும் அதில் பினௌசுக் தேசியப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
"சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவிய ஒரு காணொலிகளில் திருடிச் செல்லப்பட்டக் காரை காவல் துறையின் வாகனம் ஒன்றும் பொது மக்களும் தடுத்து நிறுத்தும் காட்சியும் காவல் துறை அதிகாரிகள் காரைத் திருடிச் சென்ற நபரைக் கைது செய்த காட்சியும் பதிவாகி இருப்பதோடு அந்தக் காரில் இருந்து பள்ளி மாணவர்கள் வெளியில் வரும் காட்சியும் இருந்ததாக சிமியுன் லோமுடின் மேலும் சொன்னார்.








