காப்பார் அருகே உள்ள மேரு இம்பியான் அடுக்குமாடியின், பிளோக் B பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட 3 வாகனங்கள் சேதமடைந்தன.
அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் 5.11 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்நிலையில், 5.50 மணியளவில் தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், காலை 6.20 மணியளவில் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்பதை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீஸால் அஸ்பார் தெரிவித்துள்ளார்.








