மூத்தக்குடிமக்கள் செய்து கொண்ட பெரும்பாலான குடியுரிமை விண்ணப்பங்கள் தோல்வியில் முடிவதற்கு முக்கிய காரணம், அவர்கள் மலாய் மொழியில் ஆளுமையை கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பிரஜைகளாகுவதற்கு முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, அவர்கள் மலாய்மொழியில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்பதாகும் என்று சைபுடின் விளக்கினார்.
வெளிநாடுகளில், அந்தந்த அதிகாரத்துவ மொழியில் அவர்களால் நல்ல முறையில் உரையாட முடிவதை நம்மால் காண முடிகிறது. அதேவேளையில் அவர்கள் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது நாட்டின் அதிகாரத்துவ மொழியான மலாய்மொழியில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
தோல்விக் கண்டவர்களுக்கு ஒரு புள்ளி மதிப்பெண் வழங்கப்படுகிறது. , வெற்றி பெற்றவர்களுக்கு 8 புள்ளி மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. அவர்கள் அந்நிய மொழியில் திறம்பட உரையாடக்கூடிய திறன் பெற்று இருந்த போதிலும் சில வேளைகளில் Terima kasih என்று மலாய் மொழியில் நன்றி சொன்னாலும் அவர்களின் வயது காரணமாக விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது சைபுடின் இதனை தெரிவித்தார்.








