Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

திரேசா கொக்கின் சிறப்பு அதிகாரி உட்பட இருவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.07-

செபூத்தே எம்.பி. திரேசா கொக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரியும், மற்றொரு நபரும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நட்புறவு திட்டத்திற்கான பிரத்தியேக நிதியை அங்கீகரித்து, உதவுவதில் கைமாறாக தங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் லஞ்சப் பணமாக வழங்க வேண்டும் என்று கேட்டுப், பெற்றதாக அந்த இருவருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

30 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் நேற்று முன்தினம் புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மார்ச் 9 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து