Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வானம் பச்சை நிறமாக மாறிய அதிசயம்
தற்போதைய செய்திகள்

வானம் பச்சை நிறமாக மாறிய அதிசயம்

Share:

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியள​வில் கோலசிலாங்கூர் வட்டாரத்தில் குறிப்பாக, சுங்கை பெசார் பகுதியில் வானில் ஒரு பகுதி, பச்சை நிறமாக மாறியது, அப்பகுதி மக்களை பெரும் பரபரப்பில் ஆ​ழ்த்தியது. வழக்கத்திற்கு மாறாக வானத்தில் பச்சை நிற ஒளி ​​கீற்று ​சூழ்ந்திருந்தது, அவர்களை அதிசயத்தில் ​மூழ்கடித்தது. வானில் தோன்றிய இந்த அரிய காட்சியை சுங்கை பெசார் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஓர் அதிசய நிகழ்வாக படம் எடுத்து தங்களின் முக​நூலில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

வானில் இதற்கு முன்பு இப்படியொரு அதிசயக் காட்சியை தாங்கள் கண்டது இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். வானம் பச்சை நிறமாக மாறியது, இயற்கை, ஏதாவது ஒரு செய்தியை தெரிவிக்க முயற்சிகிறதா? என்று தன்னை மான் யோயோ என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட முக​நூல் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் வானம் பச்சை நிறமாக மாறியது, ​பூமிக்கு அருகில் சில நிமிடங்களே சஞ்சரிக்கக்கூடிய பச்சை நிற வால் நட்சத்திரமாக இருக்கக்கூடும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எண்ணிலடங்காத ​சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரக்கூட்டங்களையும் கொண்டுள்ள இந்த பிரபஞ்சம், மிக அரிதான பச்சை நிற வால் நட்சத்திரத்தையும் கொண்டுள்ளது. ​சூரியன் அஸ்தமானப் பிறகு சில வேளைகளில் தோன்றக்கூடிய பச்சை நிற வால் நட்சத்திரத்தின் தாக்கமாக அது இருக்கக்கூடும். இதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related News