பினாங்கு தீவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் எல்ஆர்டி ரயில் திட்டம், செபராங் பிறை பெருநிலத்தையும் இணைப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் பாயான் லெபாஸ்ஸிலிருந்து ஜார்ஜ்டவுன், கொம்தார் வரையில் மட்டுமே எல்ஆர்டி நிர்மாணிக்கப்படுவதற்கு புத்ராஜெயா அனுமதி அளித்து இருந்த்தாக அந்தோணி லோக் குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் எல்ஆர்டி ரயில் திட்டம் பினாங்கு தீவில் மட்டும் மேற்கொள்ளாமல், அத்திட்டம் பினாங்கு, செபராங் பிறை பெருநிலத்தையும் இணைக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரான பிரதமர் இத்திட்டத்திற்கு முழு ஆதரவை நல்கியிருப்பதால் பினாங்கு மாநிலத்தில் எல்ஆர்டி ரயில் திட்டம், பினாங்கு தீவிலிருந்து பெரு நிலம் வரை பாயும் என்று அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


