Nov 19, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் மாயத்தோற்றத்தால் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் – போலீஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் மாயத்தோற்றத்தால் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் – போலீஸ்

சிலாங்கூர், கோலா லங்காட், பந்திங் பகுதியில், போதைப்பொருள் ஏற்படுத்திய மாயத்தோற்றத்தின் காரணமாக ஆடவர் ஒருவர் தனது தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் சுமார் ஒரு மணியளவில், 50 வயதுகளைக் கடந்த பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் 20 வயதுகளைக் கடந்த மகன் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சந்தேக நபர் வரும் நவம்பர் 20ஆம் தேதி வரை ஏழு நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு