Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டுடைமைத் திட்டத்தை அமல்படுத்த கோரி பாட்டாளிகள் அமைதி மறியல்
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டுடைமைத் திட்டத்தை அமல்படுத்த கோரி பாட்டாளிகள் அமைதி மறியல்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்த வீட்டுடைமைத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு, மாநில அரசு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரி, தோட்டப் பாட்டாளிகள், இன்று ஷா ஆலாம், sultan சலாஹூடீன் அப்துல் அஸீஸ் ஷா கட்டடத்தின் முன் அமைதி மறியலில் ஈடுப்பட்டனர்.

தோட்டப் பாட்டாளிகளுக்கான இந்த சொந்த வீட்டுடைமைத் திட்டத்தின் அமலாக்கம், வெறும் கொள்கை அளவில் இல்லாமல், பிரத்தியேக சட்டத்தின் வாயிலாக அமைய வேண்டும் என்று 150 க்கும் மேற்பட்ட தோட்டப் பாட்டாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நலனைக் காக்க, பிரத்தியேக சட்டம் ஒன்றை சிலாங்கூர் மாநில அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று அமைதி மறியலில் ஈடுப்பட்ட பாட்டாளிகள் வலியுறுத்தினர்.

தற்போது சொந்த வீட்டுடைமைத் திட்டத்திற்கான பிரத்தியேக சட்டம் இல்லாததால், தோட்டத் தொழிலாளர்கள் 60 வயதை அடைந்தவுடன் வெறும் 20 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டு தொகையுடன், தோட்டத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக தோட்டத் தொழிலாளர் ஆதரவு குழுவின் தலைவரும், மலேசிய சோசலிஷ கட்சியின் துணைத் தலைவருமான எஸ்.அருட்செல்வன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 41 தோட்டங்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு தோட்டத்திலும் சராசரி 60 குடும்பங்கள் இருப்பதாகவும், சொந்த வீட்டுடைமைத் திட்டத்திற்குப் பிரத்தியேக சட்டம் அவசியமாகிறது என்று வலியுறுத்திய அருட்செல்வன், தோட்டப்பாட்டாளிகளின் ஒரு மணி நேர மறியலுக்குப் பிறகு, சிலாங்கூர் அரசிடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

Related News