Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் பறிமுதல்

Share:

சிலாங்கூர், வட கிள்ளான் துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 18 டன் எடையிலான gelatin வகைப் போதைப்பொருள், சிலாங்கூர் தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 383 வெள்ளி மதிப்புள்ள gelatin கைப்பற்றப்பட்டதாக அதன் இயக்குநர் முகமட் சொப்ரி முகமட் ஹசிம் தெரிவித்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்.

Related News