கோலாலம்பூர், அக்டோபர்.24-
மலேசிய மாமன்னர் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிமை, ஓய்வு பெற்ற முன்னாள் மலேசிய விமானப் படைத் தளபதி டான் ஶ்ரீ முகமட் அஸ்கார் கான் கொரிமான் கான் Tan Sri Mohd மரியாதை நிமித்தமாக நேற்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
கடந்த ஜூன் மாதம் முகமட் அஸ்கார் கான் ஓய்வு பெற்றதை முன்னிட்டு இச்சந்திப்பு நடைபெற்றதாக மாமன்னரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக மலேசிய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முகமட் அஸ்கார் கானுக்கு மாமன்னர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்தவரான முகமட் அஸ்கார் கான், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மலேசிய விமானப் படையில் தலைமைப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








