Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூன்று பேர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூன்று பேர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

கோத்தா கினபாலு, ஜூன்.30-

லஞ்ச ஊழல் தொடர்பில் சபாவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர், கோத்தா கினபாலு, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

சபா, சிண்டுமின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யூசோஃப் யாகோப், தஞ்சோங் பாத்து சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அண்டி முகமட் சுர்யாடி மற்றும் ஒரு வர்த்தகரான டத்தோ அல்பெர்ட் தேய் ஆகியோரே குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.

நீதிபதி ஜேசன் ஜுகா முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →