காஜாங், ஆகஸ்ட்.11-
சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர் ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவு நெடுஞ்சாலையான இகேவிஇயில் EKVE-யில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் 27 வயதுடைய சைக்கிளோட்டி 50 கிலோமீட்டர் தூரத்திலான சைக்கிளோட்டிப் போட்டியில் பங்கேற்ற போது 13 ஆவது கிலோமீட்டரில் அவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.








