Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழை மற்றும் புயல்காற்றில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாலையில் விழுந்ததில், 3 வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் பிற்பகல் 3.19 மணியளவில் MRR2 சாலையில், அம்பாங் அருகில் நிகழ்ந்தது.
மரக்கிளைகள் மத்தியில் தத்தம் வாகனங்களில் சிக்கிக் கொண்ட அந்த அறுவரையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படை உதவி நாடப்பட்டது.
இதில் perodua alza, perodua myvi மற்றும் proton exora ஆகிய 3 கார்கள் சேதமுற்றதாக மீட்புப் பணிக்குத் தலைமையேற்றிருந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News