தும்பாட், நவம்பர்.02-
தாய்லாந்து, கோலோக்கில் மலேசியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியாவிற்கும், தாய்லாந்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பொது நடவடிக்கைப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்தியுள்ளனர்.
தாய்லாந்துக்கும், மலேசியாவிற்கும் இடையிலான எல்லைச் சாவடியில் பாதுகாப்புச் சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








