கோலாலம்பூர், ஜூலை.28-
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப் படத்திற்குப் பிரம்படி கொடுத்ததாக நம்பப்படும் இரு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த இரு நபர்களில் பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பட்ருல் ஹிஷாம் ஷாஹரின் என்ற செகுபார்ட்டும் ஒருவர் என்று அறியப்பட்டுள்ளது.
21 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த இரு நபர்களும் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1958 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம் 504 மற்றும் 233 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த இரு நபர்களையும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.








