Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நாளை தொடங்குகிறது மாபெரும் சோதனை
தற்போதைய செய்திகள்

சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நாளை தொடங்குகிறது மாபெரும் சோதனை

Share:

புத்ராஜெயா, ஜூலை 1-

கெந்திங் ஹைலண்ட்ஸி சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய சோதனை நடவடிக்கை தொடங்கப்படவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் செய்யக்கூடிய தவறுகளை கண்டபிடிப்பதற்கு இந்த ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்படும். நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சனிக்கிழமை கெந்திங் ஹைலண்ட்ஸில் சுற்றுலா பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி தடம்புரண்டதில் இரண்டு சீன நாட்டுப் பிரஜைகள் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமுற்றனர்.

அந்த பேருந்தை செலுத்திய 32 வயது ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லையென்பது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் ஏற்கனவே 27 சம்மன்களை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்