ராணுவக் கடற்படையின் கேடட் பயிற்சியாளர் ஜெ.சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் பல விஷயங்கள் கவனிக்கப்படவில்லை என்று பிரபல நோயியல் நிபுணர் டாக்டர் புபிந்தர் சிங், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சூசை மாணிக்கம் சவப் பரிசோதனை மேலோட்டமாக ஆராயப்பட்டுள்ளதே தவிர, கண்டிப்பாக ஆராய வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் ஆராயப்பட வில்லை என்று டாக்டர் புபிந்தர் சிங் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ராணுவக் கடற்படையின் பயிற்சியாளரான சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில், அவரின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு நடைபெற்று வரும் இவ்வழக்கில் தடயவியல், நோயியல் துறையில் கடந்த 26 ஆண்டு காலமாக அனுபவம் பெற்றுள்ள பினாங்கு மருத்துவமனையின் தடையவியல் பிரிவின் முன்னாள் தலைவரான டாக்டர் புபிந்தர் சிங் சாட்சியமளித்தார்.
சூசை மாணிக்கத்தின் நுரை ஈரலில் நீர் கோர்துக்கொண்டதாக சவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, எதனால் நீர் கோர்த்துக்கொண்டது என்பது குறித்து விளக்கப்படவில்லை என்று டாக்டர் புபிந்தர் சிங் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி கடற்படைத் தளத்தில் நிகழ்ந்த பயிற்சியின் போது 27 வயதுடைய சூசை மாணிக்கம் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் நடைபெற்று வரும் இவ்வழக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


