இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் ் சகோதரர் உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் ஷா ஆலாம் நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. அவ்விரு சகோதரர்கள் பயணித்த பிஎம்டபல்யூ கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 37 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் 32 வயது சகோதரர் காயங்களுடன் உயிர்தப்பினார் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் வான் முகமட் வான் ரஸாலி இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


