கூச்சிங், நவம்பர்.13-
அடுத்த ஆண்டிற்குள் சரவாக் மாநிலத்தில் உள்ள 271 பொது சுகாதார மையங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் டத்தோ அமார் டாக்டர் சிம் குய் ஹியான் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் படி, சுமார் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் 175 சுகாதார மையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பல்வேறு முகமைகளுடன் இணைந்துள்ள மாநில அரசு, மீதமுள்ள 94 சுகாதார மையங்களையும் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் இன்று வியாழக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.








