அரச குடும்பம், மலேசிய அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக சந்தேகிக்கப்படும் 39 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திரங்கானு மாநிலம் கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ராஸி ரோஸ்லி கூறுகையில், அந்த நபர் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, டாமான்சாரா டாமாய் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அவரிடமிருந்து ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு சிம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேச நிந்தனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர் வரும் புதன்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








