Dec 9, 2025
Thisaigal NewsYouTube
இண்டிகோ விவகாரம்: சென்னை - பினாங்கு இடையிலான விமானச் சேவைகளில் பாதிப்பு இல்லை
தற்போதைய செய்திகள்

இண்டிகோ விவகாரம்: சென்னை - பினாங்கு இடையிலான விமானச் சேவைகளில் பாதிப்பு இல்லை

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.08-

இந்தியாவின் இண்டிகோ விமானச் சேவை இயக்கங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை–பினாங்கு இடையிலான நேரடி விமானச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை பினாங்கு இடையிலான இண்டிகோ விமானங்கள், வழக்கம் போல், இயங்கி வருவதாக பினாங்கு சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரக் குழுவின் தலைவர் வோங் ஹொன் வாய் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, காலை 8.09 மணியளவில், சென்னையிலிருந்து வந்த 6E1045 இண்டிகோ விமானம், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கான ஓய்வு நேரத்தைக் கட்டாயமாக்கும் புதிய பணி நேர வரம்புகள் அமலுக்கு வந்ததையடுத்து, ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News