கோலாலம்பூர், நவம்பர்.10-
கடந்த மூன்று நாட்களாக நாடெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் போலீசார் மேற்கொண்ட 'ஓப்ஸ் நோடா' என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைகள் நடத்தப்பட்ட 118 பொழுதுபோக்கு மையங்களில், 103 மையங்கள் முறையான ஆவணங்கள் இன்றி, இயங்கி வந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
அதே வேளியில், கைது செய்யப்பட்ட 398 பேரில், 87 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், 311 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இயங்கி வரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள டத்தோ எம்.குமார், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.








