சபா மாநிலத்தில் அமைந்துள்ள செம்பொர்ணா சுற்றுலா தலத்திற்கு விடுமுறை கழிக்க சென்ற மாது கடலில் மூழ்கி இறந்தார். 53 வயதான அந்த பெண்மணி கடலில் ஆழ்கடல் மூழ்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று மாலை 4.15 மணியளவில் அருகில் உள்ள செம்பொர்ணா பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். என செம்பொர்ண மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.
மூச்சு திணறலுக்கு ஆளான அந்தப் பெண்மணியைப் பயிற்றுனர்கள் உடனடியாக படகில் ஏற்றி முதலுதவி கொடுத்ததாகவும் பிறகு அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்








