Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பகாங் சுல்தான் சந்தித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பகாங் சுல்தான் சந்தித்தார்

ரவுப், நவ.11-


திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரவுப் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களை மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

எந்தவொரு முன்னறிவிப்பின்றி, சுல்தானின் இந்த திடீர் வருகை ரவுப், கம்போங் தேங் மாச்சாங்கில் உள்ள சமூக மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்த விவரங்களை நேரடியாக கேட்றிந்ததுடன் அவர்களுக்கு உதவிப்பொருட்களையும் சுல்தான் வழங்கினார். ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் பகாங் மாநிலத்தில் ஏற்படும் திடீர் வெள்ளத்திற்கு தீர்வு காண்வதற்கு விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு சுல்தான் உத்தரவிட்டார்.

சுல்தானின் இவ்வருகையின் போது, அவரின் புதல்வர் பட்டத்து இளவரசர் தெங்கு ஹஸனானல் இப்ராஹிம் ஆலாம் ஷாவும் உடன் இருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →