பேரா மாநில அரசு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்க வில்லை எனக் குறிப்பிட்டு அம்மாநில தேசியக் கூட்டணி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என அக்கட்சியின் பேரா மாநில செயலாளர்டத்தோ சைனோல் ஃபட்சி பஹாருடின்l தெரிவித்துள்ளார்.
பேரா மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமாட் உடன் அம்மாநில அம்னோ இளைஞர் பிரிவு கலந்து கொண்ட ஒரு நேர்காணல் மூலம் இப்பிரச்சனையை எழுப்பி இருப்பது, ஒரு மோசமான விவாதத்தை உருவாக்க முயற்சிப்பது போல் பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
இவ்விவகாரம் குறித்து பேர அம்னோ இளைஞர் பிரிவு தவறானப் புரிதலை கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட டத்தோ சைனோல் ஃபட்சி , பேரா மனோ இளைஞர் பிரிவு தலைவர் நசிருல் ஜமாலுடின் கூறியது போல், தேசியக் கூட்டணியைச் சேர்ந்த எந்த சட்டமன்ற உறுப்பினரும் இது வரையில் எதிர்க்கட்சிக்கு வழங்கி வரும் ஒதுக்கீடு குறித்து எந்த அறிக்கையும் வெளியிட்டதில்லை என்றார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சரி சமமான ஒதுக்கீடு வழங்கி வரும் பேரா மாநில முதல்வர் சராணிக்கு தமது நன்றியையும் சைனோல் ஃபட்சி தெரிவித்துக் கொண்டார்.
மாநில அரசின் ஒதுக்கீடு சிறிய அளவுதான். பெரிய செலவுகள் அல்லது பெருந்திட்டகளைச் செயல்படுத்தப்பட வேண்டிய கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தால், பொதுமக்களின் கோரிக்கைகளை ஈடுசெய்ய போதுமானதாக இருக்காது, அவ்வாறான சூழலில், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் மாநில அரசு அல்லது மத்திய அரசு மட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மூலம் அனுப்பலாம். இதனால், ஒதுக்கீடுகளைப் பெறுவதில் சிக்கல் இருக்காது என்றார் சைனோல் ஃபட்சி.








