ஓராங் அஸ்லி ஆடவர் ஒருவர் வாய்க்காலில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8:55 மணியளவில் பகாங், பென்டாங், ஜாலான் பெனஸ் என்ற இடத்தில் 36 வயதுடைய அந்த பூர்வகுடி நபரின் சடலத்தை கண்ட பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக பெந்தோங் மாவட் போலீஸ் தலைவர் ஓ.சி.பி.டி சைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.
ஜெகா கெடெங் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபர், தென்னை மரத்தில் ஏறும் போது கால் இடறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சவப்பரிசோதனைக்கான அந்த நபரின் உடல் பெந்தோங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








