தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் காலியாக இருந்து வரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை தற்காலிகமானதே. அந்த காலியிடங்கள் தகுதியானர்களை கொண்டு நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் பணி ஓய்வு, கல்வி அமைச்சிற்கு இடம் மாற்றப்படுவது, வேறு அரசு இலாகாக்களுக்கு இடம் மாறிச் செல்லுதல், இறப்பு போன்ற காரணங்களினால் அவர்களின் பெயர்கள் கணினியின் பெயர் பட்டியலிருந்து அகற்றப்படும் போது காலியிடங்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவந்துள்ளதாக ஃபட்லினா சிடெக் இதனை குறிப்பிட்டார்.








