கெமாமான் இடைத் தேர்தலில் பாச் கட்சியின் வேட்பாளராக துன் மகாதீர் களமிறக்கப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என அக்கட்சி தெளிவு படுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய அக்க்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ செரி டாக்டர் அஹ்மாட் சம்சுரி மொக்தார் தெரிவிக்கயில், இது வரையில் அந்த இடைத் தேர்தல் குறித்து கட்சியின் உயர்மட்டம் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.
இவ்விவ்காரம் குறித்து ஆருடங்கள் தற்போது வலுத்து வரும் நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் வேட்பாளர் குறித்தும் எந்த சந்திப்புக் கூட்டமும் நடத்தப்பட வில்லை என அவர் மேலும் சொன்னார்.








