Jun 30, 2026
Thisaigal NewsYouTube
இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

Share:

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த மூன்று பேரிடமிருந்து கேமரா உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பகுதியில் தொடர்ந்து முறையான அனுமதியின்றி புகைப்படம் எடுக்கும் செயல்பாடுகள் தொடர்வதால் இந்த கடுமையானது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரப் பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், அங்கு சிலர் கட்டணம் வசூலித்து புகைப்படம் எடுத்து தரும் சேவையை வழங்கி வருகின்றனர்.

இந்த நடவடிக்கை பெட்ரோனாஸ் இரட்டை கோபுர சுற்றுப்புறம்,ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் பி. ராம்லி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, இதில் இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு சாலைப் போக்குவரத்து விதி 1987-இன் கீழ் ஆறு போக்குவரத்து அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக DBKL தெரிவித்துள்ளது.

Related News