Sep 22, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவில் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன
தற்போதைய செய்திகள்

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவில் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன

Share:

நேற்று இரவு 11.00 மணியளவில், வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் உள்ள பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை மையத்தின் இயக்குனர் முகமட் எல்மி அப்துல்லா தெரிவித்தார். 84 கிலோ மீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.6 எக்டர் என அதிர்வின் அளவு பதிவாகி உள்ளது.

நில நடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பல மாநிலங்களைச் சேர்ந்த முகநூல் பயனிட்டாளர்கள் தங்களின் தொலைபேசியின் வழி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதற்கான அபாய மணி அடித்தாகவும் நிலச நடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தவர்கள் தங்கள் மனநிலையை முகநூலில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நில நடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது என்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அது மேலும் வலியுறுத்தியது.

Related News