நாட்டில் தவறான போதனைகளை வழங்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்று அஞ்சப்படும் 7 கும்பல்களின் நடவடிக்கைகளை அரச மலேசிய போலீஸ் படை அணுக்கமாக கண்காணித்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார்.
அந்த ஏழு கும்பல்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவற்றின் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக ஐஜிபி விளக்கினார்.








