ஜோகூர் பாரு, ஜூலை.26-
ஜோகூர் பாரு, பாங்குனான் சுல்தான் இஸ்கண்டார் கட்டட வளாகத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் நோய்த் தடுப்புச் சோதனை மையத்தில் போலிக் கடப்பிதழைப் பயன்படுத்தி, ஆட்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் கணினியில் பதிவு செய்த குடிநுழைவு தொடர்பான தரவுகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதில் ஆட்களை வெளியேற்றுவதில் அவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அதிகாரத் துஷ்பிரயோகம் புரிந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது என்று அந்தச் சோதனைச் சாவடி மையத்தின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியின் கமாண்டர் ரோஸ்ஸிதா டிம் தெரிவித்தார்.
43 மற்றும் 31 வயதுடைய அந்த இரு அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








