Nov 6, 2025
Thisaigal NewsYouTube
Kalmaegi புயல் சபாவில் கண்டறியப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

Kalmaegi புயல் சபாவில் கண்டறியப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

பிலிப்பைன்ஸைக் கடுமையாக தாக்கியுள்ள Kalmaegi புயல், சபாவில் கூடாட்டில் தென் மேற்கே 976 கிலோமீட்டர் தூரத்தில் நிலைக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மணிக்கு 176 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள Kalmaegi புயல், சபாவில் நிலைக் கொண்டு இருப்பது இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டறியப்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் வானிலை மற்றும் பூவியியல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் அது மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் அவ்விடத்திலிருந்து நகர்ந்ததாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

Related News