சிலாங்கூர் அரசாங்கம் அம்மாநில மக்களுக்கு இலவசத் தண்ணீர் வழங்கும் திட்டத்தைத் தொடர உள்ளது. அதே சமயம், சுத்தமான நீர் விநியோக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தண்ணீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இது குறித்து தெரிவிக்கயில், தேசியக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் நீர் விநியோகத்தின் நிலையான தன்மையை உறுதி செய்வதில் கட்டணங்களின் அதிகரிப்பு மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜோகூர் மாநில அரசு தண்ணீர் கட்டணத்தை உயர்த்திய பிறகு, ஆயிரக்கணக்கான புதிய நீர் குழாய்களை வெற்றிகரமாக மாற்ற முடிந்ததை அமிருடின் ஷாரி சுட்டிக் காட்டினார்
.
கடந்த 30 ஆண்டுகளாக பகாங்கும், பெர்லிஸும் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தாததால் அந்தச் செலவை ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் மாநில அரசு கணிம வளம், சுற்றுச் சூழல் அமைச்சு, தேசிய தண்ணீர் சேவை ஆணையம் ஆகிவற்றுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.








