கோலாலம்பூர், டிசம்பர்.12-
யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரத்தில் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1975 ஆம் ஆண்டிலேயே நாட்டில் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், இனங்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழை உருவாக்கும் கல்வி முறை இருப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தது. இதைச் செயல்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சான்றிதழை அங்கீகரிப்பதுதான் பிரச்சினை என்று அவர் கூறினார்.
தேசிய மொழியில் செயல்படுத்தப்பட்டு, தேசிய எதிர்பார்ப்புக்கு ஏற்ப உருவாக்கப்பட்டால் அதை அங்கீகரிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று வெளியுறவு அமைச்சரான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.








