May 4, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
தற்போதைய செய்திகள்

சபாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.23-

சபா மாநில கடற்பகுதிகளில் இன்று திங்கள்கிழமை அதிகாலை 12.57 மணியளவில், 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இருப்பினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

கூடாட் மாவட்டத்திலிருந்து மேற்கே 49 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது அமைந்திருந்தது.

இந்நிலையில், சபா மாநிலம் முழுவதும் மற்றும் சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து நிலநடுக்க நிலைமையக் கண்காணித்து வருவதாகவும் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

Related News