நிலுவையில் உள்ள தங்கள் வருமான வரி தொடர்பான வழக்கில் தற்காப்பு வாதத்தை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு கேட்டு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரின் மகனும் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நஜீப் துன் ரசாக் செலுத்த வேண்டிய 169 கோடி வெள்ளி வருமான வரி மற்றும் அவரின் மகன் முகமட் நசிஃபுட்டின் செலுத்த வேண்டிய 3 கோடியே 67 லட்சம் வெள்ளி வருமான வரி தொடர்பில் நியாயம் கேட்டு தந்தையும் மகனும் இந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிம், வருமான வரி வாரியத்தற்கு எதிராக நஜிப்பும், அவரின் மகனும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








