தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு கார் ஒன்றை துரத்திக்கொண்டு சென்ற மூன்று நபர்களில் இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 41.5 ஆவது கிலோ மீட்டரில் கூலாய், செடேனாக் அருகில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில், 43 மற்றும் 48 வயதுடைய இரு உள்ளூர் ஆடவர்களை குலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அகமரூல் ஸமான் மாமாட் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து கெந்திங் ஹைலண்ட்ஸை நோக்கி ஆடவர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த மூன்று நபர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அந்த காரை துரத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


