அடைமழையின் காரணமாக கெடா அலோஸ்டார் கம்போங் புக்கிட் பாயோங் வழி வந்துக் கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் சாய்ந்ததில் 74 வயது மதிக்கத்தக்க ஊய் பூன் காக், என்பவர் மரமுற்றார்.
மாலை மணி 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தின் போது, மரம் காரின் மீது சாய்ந்ததில், காரை விட்டு வெளியேற முடியாமல், அந்த பெரியவர் மூச்சுத் திணரலுக்கு ஆளாகி காரிலையே இறந்திருக்ககூடும் என முதலுதவி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என பொக்கோ சேனா தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழுவின் செயல் அதிகாரி ஷாரின் முசா தெரிவித்தார்.








